வெங்காய ஏற்றுமதிக்கு தடை: மத்திய அரசு அதிரடி 

  Newstm Desk   | Last Modified : 29 Sep, 2019 01:52 pm
ban-on-export-of-onions-central-government-action

வெங்காய ஏற்றுமதிக்கு உடனடி தடை விதித்து மத்திய அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

மகாராஷ்ட்ரா உள்ளிட்ட மாநிலங்களில் மழையால் விளைச்சல் பாதிக்கப்பட்டதால் வெங்காயத்தின் விலை உச்சத்தை தொட்டுள்ளது. இந்த நிலையில், உள்நாட்டில் விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்காக வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. அனைத்து வகையான வெங்காயங்களையும் ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. மறுஉத்தரவு வரும் வரை தடை விதிக்கப்படுவதாக மத்திய வர்த்தக அமைச்சகம் அறிவித்துள்ளது.

வெங்காயத்தின் விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close