அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள தயார்; ஆர்.கே.எஸ். பதவுரியா

  அனிதா   | Last Modified : 30 Sep, 2019 12:47 pm
prepared-to-face-threats-bhadauria

எந்தவிதமான அச்சுறுத்தல்களையும், சவால்களையும் இந்திய விமானப்படை எதிர்க்கொள்ளும் என விமானப்படைத் தலைவராக பொறுப்பேற்றுள்ள  ஆர்.கே.எஸ். பதவுரியா தெரிவித்துள்ளார். 

இந்திய விமானப்படையின் புதிய தலைவராக ஏர் மார்ஷல் ராகேஷ் குமார் சிங் பதவுரியா இன்று பொறுப்பேற்றுகொண்டார்.  இதை தொடர்ந்து டெல்லியில் உள்ள  தேசிய போர் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், பாலகோட் பயங்கரவாத முகாம்களை பாகிஸ்தான் மீண்டும் செயல்படுத்துவது குறித்த அறிக்கைகளை அறிந்திருக்கிறோம். இது  தொடர்பாக எப்போது வேண்டுமானாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். 

மேலும், பாகிஸ்தான், சீனாவின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள ரஃபேல் போர் விமானங்கள் பெரிதும் பயன்படும் என்றும், எந்தவிதமான அச்சுறுத்தல்களையும், சவால்களையும் இந்திய விமானப்படை எதிர்க்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்தார். 

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close