திருப்பதியில் பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது 

  Newstm Desk   | Last Modified : 30 Sep, 2019 06:01 pm
in-tirupathi-the-festival-began-with-the-flag

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் புரட்டாசி மாதம் நடைபெறும் வருடாந்திர பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

பிரமோற்சவத்தை முன்னிட்டு கோயிலில் கருடன் உருவம் வரையப்பட்ட கொடி, மந்திரங்கள் முழங்க தங்கக் கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. 9 நாட்கள் நடைபெறும் பிரமோற்சவத்தில் இன்று முதல் ஏழுமலையான் சுவாமி 4 மாட வீதிகளையும் சுற்றி வந்து அருள் பாலிப்பார்.

இன்று பெரிய சேஷ வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக மலையப்பசுவாமி 4 மாட வீதிகளில் வந்து அருள்பாலிக்கிறார். அக்டோபர் 4ஆம் தேதி கருட சேவையும், 5ஆம் தேதி தங்கத் தேரோட்டமும் நடைபெறுகிறது. 

பிரமோற்சவத்தை முன்னிட்டு விழாக்கோலம் பூண்டுள்ள திருப்பதியில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close