குடியரசுத்தலைவருக்கு அமித் ஷா பிறந்தநாள் வாழ்த்து!

  அனிதா   | Last Modified : 01 Oct, 2019 10:17 am
birthday-wishes-to-president

குடியரசுத்தலைவர்  ராம்நாத் கோவிந்துக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா ட்விட்டரில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

குடியரசுத்தலைவர்  ராம்நாத் கோவிந்தின் 74வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா, 130 கோடி இந்தியர்களின் நலனுக்கான உங்கள் அர்ப்பணிப்பு முன்மாதிரி என்றும், ஒவ்வொரு வகுப்பினரின் வாழ்க்கையிலும் சாதகமான மாற்றங்களைக் கொண்டுவருவதற்கான உங்கள் முயற்சிகள் அனைவருக்கும் ஊக்கமளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும்,  கடவுள் உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும்  தர பிரார்த்திக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

Newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close