காந்தி, லால் பகதூர் சாஸ்திரி நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை!

  அனிதா   | Last Modified : 02 Oct, 2019 09:00 am
gandhi-jayanti-leaders-courtesy-in-gandhi-memorial

மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாளையொட்டி, டெல்லியில் உள்ள காந்தி நினைவிடத்தில் தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். 

தேசப்பிதா என அழைக்கப்படும் மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி குடியரசுத்தலைவர் ராம்நாத்கோவிந்த், பிரதமர் மோடி, துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பா.ஜ.க, செயல் தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர் பியூஷ்கோயல் உள்ளிட்டோர் டெல்லியில் உள்ள காந்தி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர். 

தொடர்ந்து, முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்தநாளையொட்டி, விஜயகோட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதேபோல் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மன்மோகன் சிங் மற்றும் லால் பகதூர் சாஸ்திரியின் குடும்பத்தினரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர். 

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close