புனே நகரில் கனமழை: இயல்பு வாழ்க்கை கடும் பாதிப்பு 

  Newstm Desk   | Last Modified : 04 Oct, 2019 09:51 pm
heavy-rain-fall-at-pune-city

மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் இன்று ஒரே நாளில் 60 மி.மி.,க்கு மேல் மழை பெய்தது. குறிப்பாக 1.5 மணி நேரத்தில், 44 மி.மி., மழை பெய்ததில், நகரின் முக்கிய பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. 

ஏற்கனவே பருவ மழை முடிவுக்கு வராத நிலையில், தற்போது புனே நகரில் இன்று பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. 

மாநகராட்சி ஊழியர்கள் சாலையில் தேங்கிய நீரை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். எனினும், தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், அங்கு போக்குவரத்து சீராவதில் சிரமம் ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது.  

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close