காஷ்மீர்: கையெறி குண்டு தாக்குதலில் 14 பேர் காயம்!

  அனிதா   | Last Modified : 05 Oct, 2019 03:30 pm
j-k-at-least-14-injured-in-grenade-attack-in-anantnag

அனந்த்நாக் நகரில் பயங்கரவாதிகள் கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்தியதில் போக்குவரத்து போலீசார் உட்பட 14 பேர் காயமடைந்தனர். 

தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் நகரில் உள்ள துணை ஆணையர் அலுவலகத்திற்கு வெளியே இன்று காலை 11 மணியளவில் கையெறி குண்டு வீசி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு ரோந்து மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டு வீசப்பட்ட கையெறி குண்டு தவறி சாலையோரத்தில் விழுந்து வெடித்தது. இதில் போக்குவரத்து காவலர் மற்றும் உள்ளூர் பத்திரிக்கையாளர் உட்பட 14 பேர் காயமடைந்தனர்.  காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

இது காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து திரும்பபெறப்பட்டதற்கு பின்னர் நடத்தப்பட்ட இரண்டாவது தாக்குதல் ஆகும். ஏற்கனவே கடந்த செப்.28ஆம் தேதியன்று ஸ்ரீநகரின், நாவா கடால் பகுதியில் சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். ஆனால், இந்த தாக்குதலில் எவ்வித சேதமும் ஏற்படவில்லை. 

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close