பாஸ்போர்ட்டில் ஓரினச்சேர்க்கையாளருக்கு தம்பதி அங்கீகாரம் இல்லை!

  Newstm Desk   | Last Modified : 05 Oct, 2019 04:32 pm
can-t-endorse-spouse-of-same-sex-in-passport

பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பிக்கும் போது, ஓரினச் சேர்க்கையாளர்களை தம்பதியாக அங்கீகரிக்க முடியாது என வெளியுறவுத்துறை அமைச்சகம் பாஸ்போர்ட் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. 

பொதுவாக, திருமணமான ஒவ்வொரு தம்பதியினரும் சட்டப்படி பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும்போது தங்கள் துணையின் பெயரை குறிப்பிடுகின்றனர். சமீபத்தில் வெளியுறவு அமைச்சகம் இந்தியாவிலும், வெளிநாட்டிலும் உள்ள அனைத்து பாஸ்போர்ட் வழங்கும் அதிகாரிகளுக்கும் ஒரு கடிதம் எழுதியுள்ளது. 

அந்த கடிதத்தில், பாஸ்போர்ட்டிற்கான விண்ணப்பதாரர்கள் ஓரினச் சேர்க்கையாளர்களாக இருப்பின் அவரது துணை பெயரை தம்பதியாக அங்கீகரிக்க முடியாது, ஏனெனில் இந்தியாவில் ஒரே பாலின நபர்களின் திருமணத்தை ஒழுங்குபடுத்த திருமண சட்டங்களில் எந்தவிதமான ஏற்பாடுகளும் இல்லை. எனவே பாஸ்போர்ட்டில் ஒரு விண்ணப்பதாரரின் பெயரைப் போலவே ஒரே பாலினத்தின் துணைவரின் பெயரை சேர்க்க வேண்டாம் என்று அனைத்து பாஸ்போர்ட் வழங்கும் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஓரின சேர்க்கை குற்றச்செயல் என்ற 377வது சட்டப்பிரிவின் ஒரு பகுதியை கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது. 

Newstm.in


 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close