ராமஜன்ம பூமியின் வரலாறு என்ன தெரியுமா ?

  அபிநயா   | Last Modified : 07 Oct, 2019 09:07 am
ayodhya-s-ramjanma-bhoomi-s-history

இந்தியாவின் உத்திரப்பிரதேச மாநிலத்தில், பைசாபாத் மாவட்டத்தில் உள்ள ஓர் அழகிய நகரமான அயோத்தியாவில் உள்ள ராமஜன்ம பூமி, சரயு ஆற்றங்கறையில் அமைந்துள்ளது. விஷ்ணுவின் ஏழாவது அவதாரமான இராமர், கோசல நாட்டை ஆண்ட தசரத மன்னருக்கு மூத்த மகனாக பிறந்தார் எனவும், இவரது பிறப்பிடமே ராமஜன்ம பூமி எனவும் இந்து இன மக்களால் நம்பப்படுகிறது. 

இந்துக்களின் கடவுளான இராமர் பிறந்த இடமான ராமஜன்ம பூமியை இடித்துவிட்டு, மொகலாய அரசர் பாபரின் படைத்தலைவர், முஸ்லீம்களின் வழிபாட்டு தலமான பாப்ரி மஸ்ஜித் என்னும் மசூதியை எழுப்பியதாக வரலாறுகள் கூறுகின்றன. இதை தொடர்ந்து, ஆங்கிலேயர் ஆட்சியில், இரு இனத்தவரும் வழிபடும் வகையில், ராமஜன்ம பூமியில் ஏற்பாடு செய்யப்பட்டது. 1948ஆம் ஆண்டு அந்த இடத்தில் சிறிய ராமரின் மூர்த்தி தோன்ற, அந்த மக்கள் மிகுந்த பக்தியுடன் வழிபடத்தொடங்கினர்.

ஆனால், கடந்த 1992 ஆம் ஆண்டு சர்ச்சைக்குரிய மஸ்ஜித் என்றழைக்கப்பட்ட கட்டடம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டு, மீண்டும் இராமர்  அங்குசிலை வைக்கப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை, இந்து முஸ்லீம், இருதரப்பினரும், அயோத்தியாவின் ராமஜன்ம பூமி தங்களுக்கு சொந்தமானது என கூறி வருகின்றனர்.

உச்சநீதி மன்றம், வரும் நவம்பர் 17 அன்று, இந்த வழக்கிற்கான தீர்ப்பை வழங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close