தசரா பண்டிகை: குடியரசுத்தலைவர் வாழ்த்து!

  அனிதா   | Last Modified : 08 Oct, 2019 09:16 am
dasara-festival-congratulations-from-the-president

தசரா பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

மைசூரில் சாமுண்டேஸ்வரி தேவி மகிஷாசுரனை வெற்றி கொண்ட நாளை விஜயதசமி அல்லது தசரா பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இந்தப் பண்டிகை விஜயநகரப் பேரரசர்களால் 15ஆம் நூற்றாண்டிலிருந்து கொண்டாடப்பட்டு வருகிறது. விஜயதசமியானது பத்து நாட்கள் வெகுவிமர்சையாக கொண்டாடப்படுகிறது. இந்தக் கொண்டாட்டம் நடைபெறும் பத்து தினங்களிலும் மைசூரு அரண்மனை வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிப்பது பார்க்க பார்க்க திகட்டாத ஒரு காட்சியாக இருக்கும். பல்வேறு வகையான கலைநிகழ்ச்சிகள் அரண்மனையின் முன் நடைபெறும்.

இன்று தசரா பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், தீமைக்கெதிரான நல்ல வெற்றியின் கொண்டாட்டம் தசரா என்றும் இந்நாள் மகிழ்ச்சியையும், செழிப்பையும் தரட்டும் என வாழ்த்தியுள்ளார். 

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close