ராணுவத்தில் சேர ஆர்வமுடன் குவிந்த காஷ்மீர் இளைஞர்கள்!

  Newstm Desk   | Last Modified : 08 Oct, 2019 04:25 pm
army-recruitment-camp-at-kashmir

ஜம்மு காஷ்மீர் மாநிலம், யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்ட பின், அங்கு நடைபெறும் ராணுவ ஆள் சேர்ப்பு முகாம்களில், காஷ்மீர் இளைஞர்கள் பெருந்திரளாக வருவது அதிகரித்துள்ளது. 

ஜம்மு காஷ்மீரின் குப்புவாரா மாவட்டத்தில் இன்று ராணுவ ஆள் சேர்ப்பு முகாம் நடைபெற்றது. அதில், பெருந்திரளான எண்ணிக்கையில் இளைஞர்கள் பங்கேற்றனர். மைதானத்தில் நடைபெற்ற உடல் திறன் தேர்வில் மிகுந்த ஆவலுடன் பங்கேற்றனர். 

இளைஞர்களின் இந்த செயல், நம் ராணுவத்திற்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்படுகிறது. மத்திய அரசின் நடவடிக்கைகளை காஷ்மீர் மக்கள் ஏற்றுக்கொண்டுதான் வெளிப்பாடாகவே, ராணுவத்தில் சேர இளைஞர்கள் அதிக அளவில் வந்துள்ளதும் எடுத்துக்காட்டுவதாக ராணுவ அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர். 

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close