ரஃபேல் போர் விமானம் இந்தியாவிடம் ஒப்படைப்பு: விமானத்தை அமைச்சர் ராஜ்நாத் சிங் பெற்றார்

  Newstm Desk   | Last Modified : 08 Oct, 2019 05:39 pm
rafale-fighter-plane-handed-over-to-india

பிரான்ஸில் தயாரிக்கப்பட்ட ரஃபேல் போர் விமானம் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது. முதல் ரஃபேல் போர் விமானத்தை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பெற்றுக்கொண்டார்.

பிரான்ஸின் டஸால்ட்ஏவியேசன் நிறுவனத்திடம் ரூ.59,000 கோடியில் 36 ரஃபேல் போர் விமானங்கள் வாங்க கடந்த 2016ஆம் ஆண்டு இந்தியா ஒப்பந்தம் போட்டது. இந்த நிலையில்,  ரஃபேல் போர் விமானத்தை வாங்குவதற்காக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று பிரான்ஸ் புறப்பட்டு சென்றார்.

இந்த நிலையில், பிரான்ஸில் தயாரிக்கப்பட்ட ரஃபேல் போர் விமானம் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது.பிரான்ஸ் நாட்டின் போர்டோவில் முதல் ரஃபேல் போர் விமானத்தை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பெற்றார். விமானப்படைக்கு வாங்க உள்ள 36 விமானங்களில் முதல் விமானத்தை அமைச்சர் பெற்றுக் கொண்டார்.

முதல் கட்டமாக நான்கு ரஃபேல் போர் விமானங்கள் 2020ஆம் ஆண்டு மே மாதம் இறுதியில் இந்தியாவுக்கு வரவுள்ளது. ரஃபேல் போர் விமானங்கள் ஹரியானா மாநிலம் அம்பாலா விமானப்படை தளத்தில் நிறுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close