ரஃபேல் விமானம் மூலம் விமானப்படையின் பலம் மேலும் அதிகரிக்கும்: மத்திய அமைச்சர்  ராஜ்நாத் சிங்

  Newstm Desk   | Last Modified : 08 Oct, 2019 06:56 pm
rafael-will-also-increase-the-strength-of-the-air-force-by-plane-rajnath-singh


ரஃபேல் போர் விமானங்களை சேர்ப்பதன் மூலம் இந்திய விமானப்படையின் பலம் மேலும் அதிகரிக்கும் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸில் தயாரிக்கப்பட்ட ரஃபேல் போர் விமானம் இந்தியாவிடம் இன்று ஒப்படைக்கப்பட்டது. பிரான்ஸ் நாட்டின் போர்டோவில் முதல் ரஃபேல் போர் விமானத்தை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பெற்றார்.

இதைத்தொடர்ந்து பேசிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ‘ ரஃபேல் போர் விமானங்களை சேர்ப்பதன் மூலம் இந்திய விமானப்படையின் பலம் மேலும் அதிகரிக்கும். இரு முக்கிய ஜனநாயக நாடுகளுக்கு இடையே அனைத்துத் துறைகளிலும் ஒத்துழைப்பு அதிகரிக்க வேண்டும். ரஃபேல் விமானத்தின் செயல்பாடுகளை காண ஆர்வமாக உள்ளேன். இந்தியா - பிரான்ஸ் உறவில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளோம்’ என்று மத்திய அமைச்சர் பேசியுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close