ரஃபேல் விமானத்தில் பறந்த அனுபவம் குறித்து அமைச்சர் ராஜ்நாத் சிங் 

  Newstm Desk   | Last Modified : 08 Oct, 2019 09:18 pm
minister-rajnath-singh-on-the-experience-of-flying-rafael

ரஃபேல் போர் விமானத்தில் சூப்பர் சானிக் வேகத்தில் பயணித்ததாக மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸில் ரஃபேர் போர் விமானம் இந்தியாவிடம் இன்று ஒப்படைக்கப்பட்டது. பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விமானத்தை பெற்றுக்கொண்டார். இதையடுத்து, ரஃபேல் விமானத்திற்கு பூஜை செய்யப்பட்டு, அந்த விமானத்தில் அமைச்சர் ராஜ்நாத் சிங் பறந்தார்.

இந்த நிலையில், ரஃபேல் போர் விமானத்தில் பறந்த பின் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அளித்த பேட்டியில், ‘ரஃபேல் போர் விமானம் மிகவும் வசதியாகவும், மென்மையாகவும் உள்ளது. இந்த விமானத்தில் பயணித்தது இதுவரை இல்லாத அனுபவமாக இருந்தது. போர் விமானத்தில் சூப்பர் சானிக் வேகத்தில் பயணிப்பேன் என்று நினைத்துக்கூட பார்த்ததில்லை’ என்று அமைச்சர் கூறியுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close