பிரதமருக்காக தயாராகி வரும் ஏர் இந்தியாவின் புதிய பி-777 விமானம்

  அபிநயா   | Last Modified : 10 Oct, 2019 02:54 pm
a-news-aircraft-b-777-designed-for-pm-narendra-modi

பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட மிக முக்கிய தலைவர்களுக்காக பிரத்தியேகமாக தயாராகி வரும் ஏர் இந்தியாவின் புதிய பி-777 விமானம், அடுத்த ஆண்டு ஜூலை மாதம் முதல் இயக்கப்படும் என செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட மிக முக்கிய தலைவர்களுக்காக ஏர் இந்தியா நிறுவனம் பிரத்தியேகமான பி-777 என்ற விமானத்தை தயாரித்து வந்த நிலையில், அதை இயக்கும் பொறுப்பு, இந்திய விமானப்படையின் மிகச்சிறந்த விமானிகளிடம் ஒப்படைக்கப்பட போவதாக கூறப்படுகின்றது.

இதற்காக இந்திய விமானப்படையிலிருந்து 6 விமானிகள் தேர்வு செய்யப்பட்டு. அவர்களுக்கான சிறப்பு பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த பி-777 விமானம், அமெரிக்காவின் போயிங் நகரிலிருந்து, அடுத்த ஆண்டு ஜூலை மாதம் இந்தியா வந்தடையும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவ்விமானத்தில் பயணிக்கப்போகும், பயணிகளின் பாதுகாப்பிற்காக, அனைத்து பாதுகாப்பு அம்சங்களும் பொருத்தப்பட்டிருப்பதாகவும், கடந்த பிப்ரவரி மாதம், அமெரிக்காவிடம் இது குறித்து கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு இருவரும் பயணிக்கும், ஏர் இந்தியாவின் பி-747 விமானத்தின் பொறுப்பாளரான  ஏர் இந்தியா பொறியியல் சேவை அமைப்பே இவ்விரு விமானங்களின் பொறுப்பாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close