கண்டதும் காதல்: பார்த்த நான்கு மணி நேரத்தில் திருமணம்!!!

  அபிநயா   | Last Modified : 11 Oct, 2019 04:40 pm
wedding-at-first-sight-couple-marries-within-4-hours-of-meeting-at-durga-puja-pandal-in-kolkata

முதல் முறையாக நேரில் கண்டு, கண்டதும் காதல் வயப்பட்டு, நான்கு மணி நேரத்தில் திருமணமும் செய்து முடித்த காதல் ஜோடிகள்.

பேஸ்புக் நண்பர்களான சுதீப் கோஷல் மற்றும் ப்ரதீமா இருவரும், மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் வைத்து துர்கா பூஜையன்று சந்தித்துள்ளனர். ப்ரதீமாவை கண்டதும் காதல் வயப்பட்ட சுதீப், திருமணம் செய்து கொள்ளலாம் என்று ப்ரதீமாவிடம் கேட்டுள்ளார். அதற்கு ப்ரதீமாவும் சம்மதம் தெரிவிக்க உடனே இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

இது குறித்து சுதீப் கூறுகையில், "நாங்கள் அன்று தான் முதல் முறையாக நேரில் சந்தித்தோம். கண்டதும் எனக்கு பிடித்துவிட்டது. அவளும் சம்மதம் தெரிவித்த நிலையில், நாங்கள் திருமணம் செய்து கொண்டோம் என்று கூறினார்.

பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்த நிலையில், தம்பதிகள் இருவரும் தற்போது மகிழ்ச்சியாக உள்ளனர்.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close