பாக்., ராணுவம் அத்துமீறல்: ஜம்மு காஷ்மீரில் மீண்டும் தாக்குதல் 

  Newstm Desk   | Last Modified : 11 Oct, 2019 07:04 pm
pak-army-attack-at-jammu-kashmir

ஜம்மு காஷ்மீரில் பாக்கிஸ்தான் ராணுவம் இன்று காலை மீண்டும் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் நம் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார். 

ஜம்மு காஷ்மீரின் நவ்ஷெரா பகுதியில் பாக்கிஸ்தான் ராணுவம் இன்று காலை மீண்டும் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ஏற்கனவே பலமுறை, அந்நாட்டு ராணுவம், நம் நாட்டு எல்லையில் பலமுறை தாக்குதல் நடத்திய நிலையில், இன்றைய தாக்குதலில் நம் வீரர் ஒருவர் படுகாயம் அடைந்தார். 

அவரை மீட்ட சக வீரர்கள், மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதனை தொடர்ந்து நம் ராணுவமும் பதில் தாக்குதல் நடத்தி வருவதால், இரு நாட்டு எல்லையில் பதற்றமான சூழல் நிலவுகிறது. 

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close