இந்தியா- சீனா பொருளாதார சக்தி வாய்ந்த நாடுகள்: பிரதமர் மோடி

  அனிதா   | Last Modified : 12 Oct, 2019 12:39 pm
india-and-china-are-the-economic-power-pm-modi

இந்தியாவும், சீனாவும் பொருளாதார சக்தி வாய்ந்த நாடாக உள்ளன என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

கோவளம்  ஹோட்டலில் இந்தியா -சீனா அதிகாரிகள் இடையேயான பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் பேசிய பிரதமர் மோடி, மதிப்பிற்குரிய விருந்தினரை வரவேற்கிறேன் என தமிழில் வரவேற்றார். சீனா, தமிழகம் இடையேயான வர்த்தகம் கலாச்சாரம் தொடர்பான உறவு 2000 ஆண்டுகளுக்கும் மேலானது. இந்தியாவும் சீனாவும் மிகப்பெரும்பொருளாதார சக்தி நிறைந்த நாடுகள். சீனாவின் வூஹானில் நிகழ்ந்த சந்திப்புக்குப்பின் இரு நாடுகளிடையேயான ராஜரீக உறவு அதிகரித்துள்ளது. முதல் முறைசாரா உச்சி மாநாட்டில் இரு தரப்பு உறவில் நிலைத்த தன்மை ஏற்பட்டது. முதல் உச்சிமாநாட்டை தொடர்ந்து இரு தரப்பு உறவு நீடித்தது என தெரிவித்தார். 

Newstm.in 


 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close