2 நாள் சென்னை பயணத்தை நிறைவு செய்தார் ஜின்பிங்!

  அனிதா   | Last Modified : 12 Oct, 2019 02:13 pm
jinping-completed-2-day-chennai-trip

பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று தமிழகம் வந்த சீன அதிபர் 2 நாள் சுற்றுபயணத்தை இன்று நிறைவு செய்தார். 

பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று சீன அதிபர் ஷி ஜின்பிங் 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் தமிழக முதலமைச்சர் பழனிசாமி, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆகியோர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். இதை தொடர்ந்து பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் மாமல்லபுரம் சுற்றுலா தளங்களை பார்வையிட்டனர். 

இன்று 2 வது நாளாக கோவளம் ஹோட்டலில் பிரதமர் மோடி மற்றும் ஜின்பிங் பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் 1 மணி நேரம் இந்த பேச்சுவார்த்தை நடந்தது. இதை தொடர்ந்து பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜின் பிங் தலைமையில் உயர் மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற்றது. பின்னர் தாஜ் ஃபிஷர்மேன் கோவ் ஹோட்டலில் அமைக்கப்பட்டிருந்த தமிழக கலைப்பொருட்கள் மற்றும் கைத்தறி கண்காட்சியினை பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜின்பிங் தொடங்கி வைத்து பார்வையிட்டனர். மதிய விருந்து அளித்து சீன அதிபரை பிரதமர் மோடி வாசல் வரை சென்று வழியனுப்பி வைத்தார். 

சென்னை விமானநிலையம் சென்ற சீன அதிபர் அங்கிருந்து விமானம் மூலம் நேபாளம் நாட்டிற்கு புறப்பட்டார். சென்னை விமான நிலையத்தில் தமிழக  ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் அவரை வழியனுப்பி வைத்தனர். 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close