டெல்லியில் தொடர்ந்து வரும் திருட்டுகள் - பிரதமரின் குடும்பத்தினரையும் விட்டு வைக்காத பைக் கொள்ளையர்கள்

  அபிநயா   | Last Modified : 12 Oct, 2019 08:09 pm
pm-modi-s-niece-robbed-of-rs-56-000-2-cellphones-documents-in-delhi

பிரதமர் நரேந்திர மோடியின் உறவினரான தமயந்தியின் கைப்பையைத் திருடிச் சென்ற, இருவரையும் பிடிக்க, டெல்லி போலீசார், தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

சமீபகாலமாக, இந்தியாவின் பல முக்கிய நகரங்களிலும், பைக்கொள்ளையர்களின் நடமாட்டம் அதிகரித்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன. இந்நிலையில், இந்தியாவின் தலைநகரமான டெல்லியில், பிரதமர் மோடியின் சகோதரர் மகளான தமயந்தியின் கைப்பையை பைக்கொள்ளையர்கள் திருடிச் சென்றுள்ளனர். டெல்லியின் குஜராத்தி பவன் வாசலில் வைத்து இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.  

இச்சம்பவம் குறித்து டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருடப்பட்ட அவரது கைப்பையில், 56,000 ரூபாயும், இரண்டு மொபைல் போன்களும், சில முக்கிய ஆவணங்களும் இருந்ததாக தமயந்தி போலீசாரிடம் கூறியுள்ளார். 

இச்சம்பவம் நடந்தேறிய இடத்திலிருந்து, சில கிலோமீட்டர் தொலைவிலே, லெப்டினட் கவர்னர் அணில் பைஜால் மற்றும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரீவால் ஆகிய இருவரின் வீடுகளும் இருப்பதாக தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

Newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close