நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதில் ராணுவம் ஓர் முக்கிய பங்கு வகிக்கிறது - அஜித் தோவல்

  அபிநயா   | Last Modified : 15 Oct, 2019 06:54 pm
armies-that-are-better-equipped-decide-the-destiny-of-mankind-ajit-doval

நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதில் ராணுவம் ஓர் முக்கிய பங்கு வகிப்பதாக கூறியுள்ளார் மத்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்.

இன்று (செவ்வாய்க்கிழமை), டெல்லியில் நடந்த பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் சந்திப்பில்,  உரையாற்றிய, மத்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், "தற்போதைய உலகில் மிக முக்கியமானவையாக கருதப்படுவது இரண்டு தான். ஒன்று தொழில்நுட்பம் மற்றொன்று பணம். இவை இரண்டும் தான் ஒரு நாட்டின் வளர்ச்சியை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

இந்த இரண்டில், மிகவும் முக்கியமானது தொழில்நுட்பம். ஓர் நாட்டின் பாதுகாப்பு அதன் தொழில்நுட்ப வளர்ச்சியை பொருத்துதான் இருக்கும். நமது தொழில்நுட்பம் மிகச்சிறந்த முறையில் இருக்குமாயின், பிற நாடுகள் நம்மீது தாக்குதல் மேற்கொள்ள யோசிக்கும்.

பிரதமர் மோடியின் ஆட்சியில், இந்திய ராணுவம், கடற்படை, விமானப்படை என அனைத்திலும் பல முன்னேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ரஃபேல் போர் விமானம், தேஜாஸ் போர் விமானம், எஸ்-400 என தற்போதைய  தொழில்நுட்பம் வாய்ந்த பல ஆயுதங்கள் நம் இந்திய படையுடன் இணைக்கப்பட்டுள்ளது. 

ஆனால், இன்று நாம் பெரிதாக நினைக்கும் தொழில்நுட்பத்தை தோற்கடிக்கும் வகையான வேறொரு கருவி நாளை உருவாகலாம். அந்த தடைகளை தைரியமாக எதிர்க்கொள்ள நாம் அனைவரும் எப்போதும் தயாராக இருக்க வேண்டும்" என்று  கூறியுள்ளார்.

இந்நிலையில், நவீன முறையில் ஆயுதங்கள் தயாரிக்க, தற்போது மத்திய அரசு ஒதுக்கியிருக்கும் நிதி போதுமானதாக இல்லை என இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் அதிகாரிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close