கல்லீரல் நோயினால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமிதாபச்சன் !!

  அபிநயா   | Last Modified : 18 Oct, 2019 02:02 pm
actor-amitabh-bachchan-hospitalised-for-3-days-due-to-liver-ailment

இந்திய சினிமாவின் "ஐகான்" ஆக கருதப்படும் அமிதாபச்சன், கல்லீரல் நோய் காரணமாக கடந்த 3 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக செய்திகள் கூறுகின்றன.

பாலிவுட் நடிகர் அமிதாபச்சன், கல்லீரல் நோய் காரணமாக  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், கடந்த செவ்வாய்கிழமையன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சுமார் 3 நாட்களாக சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. 

அவரது குடும்பத்தினர் தரப்பில் இருந்து அவர் தற்போது மருத்துவமனையில் இருப்பது போன்ற எந்த தகவலும் வெளியாகவில்லை எனினும் அவர் மருத்துவமனையில் தான் இருக்கிறார் என்று தகவல்கள் கூறுகின்றன. மேலும், அவரது கல்லீரல் நோய் குறித்து ஏற்கனவே அவர் கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close