பதவி பெற வேண்டி கொலையும் செய்வாரா ஓர் துணை வேந்தர்? இருக்கிறார் பாருங்கள் பெங்களூரில்

  அபிநயா   | Last Modified : 18 Oct, 2019 05:44 pm
bengaluru-police-arrest-vice-chancellor-for-plotting-predecessor-s-murder-over-control-of-university

கர்நாடக மாநிலம் பெங்களுரில், பதவி மீதிருந்த மோகத்தால், சுதிர் அங்கூர்(57) என்பவர் ஐயப்பா(53) என்பவரை ஆள் வைத்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களுரில் உள்ள ஓர் தனியார் பல்கலைகழகத்தில் முன்னாள் துணை வேந்தராக பணியாற்றிய ஐயப்பா என்பவர் கடந்த செவ்வாய்கிழமை அன்று, தனது வீட்டிற்கு அருகே உள்ள ஒரு மைதானத்தில் பல கத்தி குத்து காயங்களுடன் இறந்து கிடந்தார்.

இது குறித்து அவரது குடும்பத்தினர் கூறுகையில், கடந்த திங்கட்கிழமை இரவு உணவிற்கு பிறகு அவர் நடைபயிற்சி மேற்கொள்ள வெளியில் சென்றதாகவும், திரும்ப வரவில்லை எனவும் கூறியுள்ளனர். 

இந்த சம்பவத்தை தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட போலீசார், அவர் இறந்த இரண்டு தினங்களில், சுதிர் அங்கூர் மற்றும் சூரஜ் சிங் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

ஐயப்பா துணை வேந்தராக பணியாற்றிய அதே பல்கலைகழகத்தில் தற்போது துணை வேந்தராக பணியாற்றி வரும்  சுதிர் அங்கூர், பதவி மேல் கொண்ட மோகத்தால், சூரஜ் சிங் என்பவருக்கு 1 கோடி ரூபாய் கொடுத்து ஐயப்பாவை கொலை செய்ய கூறியதாக  போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சம்பவம் நடைபெற்ற இடத்தில், ஐயப்பாவின் கைபேசி இல்லாததால், இது திருடர்களின் வேலையாக இருக்கும் என்ற ரீதியில் ஆலோசித்த போலீசாருக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக அமைந்துள்ளது தற்போது அவர்களுக்கு கிடைத்துள்ள தகவல்கள். இதற்கு பின் வேறு காரணங்களோ ஆட்களோ உள்ளனரா என்பது குறித்து போலீசார் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close