வெங்காயம், தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை: மத்திய அமைச்சர்

  அனிதா   | Last Modified : 19 Oct, 2019 02:31 pm
measures-to-curb-onion-and-tomato-prices-union-minister

வெங்காயம், தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தெரிவித்துள்ளார். 

மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் வெங்காய விளைச்சல் அதிகமாக உள்ளதாகவும், தீபாவளிக்கு பின் டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் வெங்காயம் அதிகளவில் இறக்குமதி செய்யப்படும் எனவும் தெரிவித்தார். மேலும், ஆந்திராவில் தக்காளி விளைச்சல் நன்றாக இருப்பதால் வட மாநிலங்களுக்கு அனுப்ப கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும், பெரும்பாலான மாநிலங்களில் தக்காளி விலை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் மத்திய அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close