பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல்

  அனிதா   | Last Modified : 20 Oct, 2019 12:40 pm
india-attacks-terror-camps

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. 

காஷ்மீரில் பயங்கரவாதிகளை ஊடுருவ செய்வதற்காக பாக்.ராணுவம் இன்று அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதில் 2 இந்திய வீரர்கள் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய ராணுவம் பாக்.ஆக்கிரமிப்பு காஷ்மீரில், தங்தார் பகுதியில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது பீரங்கிகள் மூலம் கடும் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்திய எல்லைக்குள் பயங்கரவாதிகளை அனுப்புவதற்கு பாகிஸ்தான் அளித்துவரும் ஆதரவிற்கு பதிலடி தரும் விதமாக நம் ராணுவம் தாக்குதலை நடத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Newstm.in 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close