குளிர்கால கூட்டத்தொடர் நவ.18ல் தொடக்கம்

  அனிதா   | Last Modified : 21 Oct, 2019 12:36 pm
winter-session-begins-nov-18

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவ.18ஆம் தேதி தொடங்குகிறது. 

நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஆண்டு 3 முறை கூடுகிறது. பட்ஜெட் கூட்டத்தொடர், மழைக்கால கூட்டத்தொடர், குளிர்கால கூட்டத்தொடர் என மூன்று கூட்டத்தொடர் நடத்தப்படுகிறது. இதில் மக்களுக்கு தேவையான நலத்திட்டங்கள் மற்றும் சட்டத்திட்டங்கள் வகுக்கப்படுகின்றன. நிகழாண்டுக்கான பட்ஜெட், மழைக்கால கூட்டத் தொடர் ஏற்கனவே நிறைவடைந்த நிலையில், குளிர்கால கூட்டத்தொடர் நவ.18ல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம், இரு அவைகளின் செயலர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளது. மேலும், நவ.18ல் தொடங்கி டிச.13ஆம் தேதி வரை குளிர்கால கூட்டத்தொடர் நடைபெறவுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Newstm.in 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close