சியாச்சின் மலைப்பகுதி இயற்கையின் பேரழகு: ராஜ்நாத் சிங்

  அனிதா   | Last Modified : 22 Oct, 2019 11:59 am
the-mountainous-region-of-siach-is-a-natural-beauty-rajnath-singh

லடாக்கில் 18 மாதங்களில் கட்டிமுடிக்கப்பட்ட அதி நவீன பாலமான கர்னல் சேவாங் ரிஞ்ஞேன் பாலத்தை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார். 

லடாக்கில் உள்ள ஷியோக் நதியின் மீது 14,600 அடி உயரத்தில் லே பகுதியையும் காரகோரம் கணவாயையும் இணைக்கும் வகையில்  கர்னல் சேவாங் ரிஞ்ஞேன் பாலம் கட்டுப்பட்டுள்ளது. உலகின் மிக உயர்ந்த போர்க்களமான சியாச்சின் போர் முனையின் அடிவாரம் வரை செல்வதற்கு ஏதுவாக இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது.

இந்த அதிநவீன பாலத்தின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. திறப்பு விழா நிகழ்ச்சியில் ராணுவத் தளபதி பிபின் ராவத், ராஜ்நாத் சிங் ஆகியோர் கலந்து கொண்டு பாலத்தை திறந்து வைத்தனர். நிகழ்ச்சியில் பேசிய ராஜ்நாத்சிங் சியாச்சின் மலைப்பகுதி போர் முனை மட்டுமல்ல. மிக அருமையான இயற்கைக் காட்சிகளை அள்ளி வழங்கும் மலைப்பிரதேசமாகும். எனவே மக்கள் இங்கு சுற்றலா வரத்தொடங்க வேண்டும் என நாட்டுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close