கேரளாவில் போக்குவரத்து விதிமீறல் அபராதத்தை குறைத்த அரசு

  Newstm Desk   | Last Modified : 23 Oct, 2019 09:20 pm
the-government-has-reduced-the-traffic-violation-fine-in-kerala

போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுவோருக்கான அபராதத்தை குறைத்து நிர்ணயிக்க கேரள அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

அதன்படி, அதிக வேகத்தில் சென்று முதன்முறையாக பிடிபடும் இலகு ரக வாகன ஓட்டிகளுக்கு ரூ.1,500 அபராதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிவேகமாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு இதுவரை ரூ.1000-ரூ.2,000 அபராதம் விதிக்கப்பட்டு இருந்தது. வேகமாக செல்லும் கனரக வாகனங்களுக்கு ரூ.2,000 - ரூ.4,000 அபராதம் விதித்த நிலையில் ரூ.3,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டுவோருக்கு ரூ.1000-ரூ.5,000 விதித்த நிலையில் ரூ.2,000 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close