ஜம்மு - காஷ்மீர், லடாக்கிற்கு புதிய ஆளுநர்கள் நியமனம்!

  அனிதா   | Last Modified : 26 Oct, 2019 10:54 am
new-governors-appointed-for-jammu-and-kashmir-and-ladakh

ஜம்மு- காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து திரும்ப பெறப்பட்டதோடு, ஜம்மு -காஷ்மீர், லடாக் ஆகியவை 2 யூனியன் பிரதேங்களாக அறிவிக்கப்பட்டது. அக்.31 ஆம் தேதி முதல் 2 புது யூனியன் பிரதேசங்கள் உதயமாகவுள்ளன. இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர், லடாக் ஆகிய யூனியன் பிரதேசங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலத்தை சேர்ந்த கிரிஷ் சந்திர மர்மு ஜம்மு காஷ்மீரின் ஆளுநராகவும், முன்னாள் ராணுவ செயலாளரும், முன்னாள் தலைமை தகவல் கமிஷனருமான ஆர்.கே.மாத்தூர் லடாக்கின் புதிய ஆளுநராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். 

தற்போது ஜம்மு - காஷ்மீர் ஆளுநராக பணியாற்றி வரும் சத்யபால் மாலிக் கோவா ஆளுநராக பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக குடியரசுத் தலைவர் மாளிகை தெரிவித்துள்ளது. 

Newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close