ஹரியானா மாநில முதல்வராக மீண்டும் பதவியேற்றார் மனோகர்!

  அனிதா   | Last Modified : 27 Oct, 2019 03:29 pm
manohar-sworn-in-as-haryana-chief-minister

ஹரியானா மாநிலத்தின் முதல்வராக மனோகர் லால் கத்தார் இன்று மீண்டும் பதவி ஏற்றார். 

ஹரியானா மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜக கட்சி 40 இடங்களையும், காங்கிரஸ் 31 இடங்களையும் கைப்பற்றியது. ஆட்சியமைப்பதற்கு 46 இடங்கள் தேவை என்ற பட்சத்தில் பாஜக சுயேட்சை கட்சிகள் ஆதரவுடன் ஆட்சி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டது. 5 சுயேட்சை கட்சிகள் ஆதரவு அளிக்க முன்வந்தனர். இதனிடையே 10 தொகுதிகளில் வெற்றி பெற்ற துஷ்யந்த் சவுதாலா தலைமையிலான ஜனநாயக ஜனதா கட்சி ஆதரவு அளித்தது. 

இதையடுத்து, கவர்னர் சத்யடியோ நரைன் ஆர்யா-வை முதலமைச்சர் மனோகர் லால் கத்தார் நேற்று மாலை சந்தித்து ஆட்சி அமைப்பதற்கு உரிமை கோரினார். முதலமைச்சரின் கடிதத்தை ஏற்றுக்கொண்ட ஆளுநர் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில், முதலமைச்சர் மனோகர் லால் கத்தார், துணை முதலமைச்சர் துஷ்யந்த் சவுதாலா மற்றும் அமைச்சர்களுக்கு பதவி பிரமாணமும் காப்புறுதி பிரமாணமும் செய்து வைத்தார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஹரியானா மாநிலத்தில் அமைந்த முதல் பாஜக ஆட்சியின் முதலமைச்சராக பொறுப்பேற்ற மனோகர் லால் இன்று இரண்டாவது முறையாக மீண்டும் முதலமைச்சராக பதவியேற்றுள்ளார். 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close