பசுஞ்சாணத்தில் தயாரிக்கப்படும் பசுமை விளக்குகள்: சட்டீஸ்கர் பெண்கள் சாதனை!

  Newstm Desk   | Last Modified : 27 Oct, 2019 05:04 pm
diyas-for-diwali-made-with-cow-dung-chatteshgar-womens-creates-record

சட்டீஸ்கர் மாநிலம் ராய்பூரை சேர்ந்த பெண்கள், சுய உதவிக்குழு உதவியுடன் புதிய முயற்சியில் இறங்கி அதில் சாதனை படைத்துள்ளனர். 

பெருகிவரும் சுற்றுசூழல் மாசுபாட்டை தடுக்கும் வகையில், பசுஞ்சாணத்தை பயன்படுத்தி, தீபாவளிக்கு பயன்படுத்தும் விளக்குகளை தயாரிக்க ராய்பூரை சேர்ந்த பெண்கள் சிலர் திட்டமிட்டனர். அதன்படி, நிதி உதவிக்காக, சுயஉதவிக்குழுவை நாடினர். 

தங்களுக்கு கிடைத்த நிதி உதவி மூலம், பசுஞ்சாணியை காயவைத்து அவற்றை பக்குவப்படுத்தி, அதில் விளக்குகளை தயாரித்துள்ளனர். ஒரு நாளைக்கு ஒரு பெண்மணி, 300 விளக்குகளை தயார் செய்கிறார். 30க்கும் மேற்பட்ட பெண்கள் ஒன்று கூடி செய்யும் இந்த பணி மிகப்பெரிய சாதனையாக உருவாகியுள்ளது. 

இவ்வகை விளக்குகளை பயன்படுத்துவதால் சுற்றுசூழல் மாசுபாட்டை தவிர்ப்பதுடன், கிராமப்புற பொருளாதாரத்தையும் உயர்த்த முடியும் எனக்கூறி, மாவட்ட நிர்வாகம், இவர்களை ஊக்குவித்து வருகிறது. 


newstm.in 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close