6வது முறையாக ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி!

  அனிதா   | Last Modified : 28 Oct, 2019 09:47 am
celebrated-on-diwali-with-braive-soldiers-in-pm

பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து 6வது முறையாக ராணுவ வீரர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடினார். 

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையை ராணுவ வீரர்களுடன் கொண்டாடுவதை பிரதமர் நரேந்திர மோடி வழக்கமாக கொண்டுள்ளார். அந்தவகையில் நேற்று காஷ்மீர் மாநிலம் ரஜோரியில் ராணுவ வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடினார். மேலும் ராணுவ வீரர்களின் உடை அணிந்து அவர்களில் ஒருவராகவே நிகழ்ச்சியில் பங்கேற்று அவர்களுக்கு இனிப்புகளை வழங்கி மகிழ்ந்தார். 

முன்னதாக கடந்த 2014 ஆம் ஆண்டு, முதன் முறையாக பிரதமர் மோடி காஷ்மீரில் உள்ள சியாச்சின் பகுதியில் ராணுவ வீரர்களுடன் தனது தீபாவளி பண்டிகையை கொண்டாடினார். 

அதையடுத்து 2015 ஆம் ஆண்டு, பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸிலும், 2016 ஆம் ஆண்டு, சீன எல்லையான ஹிமாச்சப்பிரதேசத்தில் உள்ள கின்னவூர் பகுதியிலும், 2017ஆம் ஆண்டு காஷ்மீரில் உள்ள குரேஸ் பள்ளத்தாக்கு பகுதியிலும் தனது தீபாவளியை ராணுவ வீரர்களுடன் கொண்டாடினார். 

இதேபோல், கடந்த ஆண்டு உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள ஹர்சில் என்ற இடத்தில் ராணுவ வீரர்களுடன் தனது தீபாவளியை கொண்டாடினார். இந்நிலையில், வழக்கம் போல் பிரதமர் மோடி இந்த ஆண்டு தீபாவளியையும் ராணுவ வீரர்களுடன் அவர்களது உடைகள் அணிந்து மகிழ்ச்சியாக கொண்டாடினார். தீபாவளி பண்டிகைக்காக காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து திரும்ப பெறப்பட்டதையடுத்து பிரதமர் மோடி முதல்முறையாக காஷ்மீர் சென்றது குறிப்பிடத்தக்கது. 

 

— Narendra Modi (@narendramodi) October 27, 2019

 

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close