ஐரோப்பிய நாடாளுமன்ற குழு பிரதமர் மோடியுடன் சந்திப்பு!

  அனிதா   | Last Modified : 28 Oct, 2019 03:33 pm
eu-delegation-meets-pm-modi

காஷ்மீர் நிலமை குறித்து தெரிந்து கொள்வதற்காக நாளை காஷ்மீர் செல்லவுள்ள ஐரோப்பிய நாடாளுமன்ற தூதுக்குழு இன்று பிரதமர் மோடியை சந்தித்தது. 

காஷ்மீருக்கு மத்திய அரசு வழங்கி வந்த சிறப்பு அந்தஸ்து கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி நாடாளுமன்றத்தில் திரும்பபெறப்பட்டது. சிறப்பு அந்தஸ்து திரும்பபெறப்பட்டு கிட்டதட்ட 3 மாதங்கள் ஆகும் நிலையில், காஷ்மீரில் நிலவும் நிலமை குறித்து தெரிந்துகொள்வதற்காக  28பேர் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழு நாளை காஷ்மீர் செல்ல உள்ளது. 

இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடாளுமன்ற தூதுக்குழு இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல் ஆகியோரை சந்தித்து காஷ்மீர் நிலவரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியது. மேலும், காஷ்மீர் செல்வதற்கு முன்பு குடியரசு துணைத் தலைவர் வெங்கையாநாடுவையும் இன்று சந்தித்து பேசவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close