ரியாத்தில் எரிசக்தி துறை அமைச்சரை சந்தித்தார் பிரதமர் மோடி

  அனிதா   | Last Modified : 29 Oct, 2019 03:39 pm
modi-meets-minister-of-energy-of-saudi-arabia

அரசு முறை பயணமாக சவுதி சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அங்கு எரிசக்தி துறை அமைச்சர் அப்துல் அஜிஸ் பின் அல் சவுத்தை சந்தித்தார். 

பிரதமர் நரேந்திரமோடி 2 நாள் அரசு முறை பயணமாக சவுதி சென்றுள்ளார். தனி விமானம் மூலம் நேற்றிரவு ரியாத்தை சென்றடைந்த பிரதமர் மோடிக்கு ரியாத் ஆளுநர் மற்றும் அதிகாரிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். இது பிரதமர் நரேந்திர மோடியின் 2வது பயணம் ஆகும். ஏற்கனவே கடந்த 2014ஆம் ஆண்டு பிரதமர் மோடி சவுதி சென்றிருந்தபோது, மன்னர் சல்மான் சவுதியின் மிக உயர்ந்த சிவில் விருதினை பிரமர் மோடிக்கு வழங்கினார். இதையடுத்து சவுதியின் முடி இளவரசர் கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவிற்கு வருகை தந்திருந்தார். இதையடுத்து சவுதி - இந்தியா இடையே நல்லுறவு மேம்பட்டது. 

பிரதமர் மோடியின் இந்த பயணத்தில், பாதுகாப்பு மற்றும் எரிசக்தி தொடர்பான முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ரியாத் சென்றுள்ள பிரதமர் மோடி அங்கு சவுதி அரேபியாவின் எரிசக்தி துறை அமைச்சர் அப்துல்அஜிஸ் பின் சல்மான் அல் சவுத்தை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

Newstm.in 


 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close