ரஷ்ய அதிபர் புடின் ஜல்லிக்கட்டை பார்க்க தமிழகம் வரும் தகவல் தவறு

  Newstm Desk   | Last Modified : 29 Oct, 2019 11:06 pm
russian-president-vladimir-putin-visiting-tamil-nadu-and-watching-jallikattu-along-with-pm-modi-are-incorrec

ரஷ்ய அதிபர் புடின் ஜல்லிக்கட்டை பார்க்க தமிழகம் வருகிறார் என்ற தகவல் தவறானது என்று ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் மதுரை அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை காண்பதற்காக ரஷ்ய அதிபர் புடின் தமிழகம் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து ஜல்லிக்கட்டை பார்வையிட உள்ளதாகவும், புடின் வருகை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு டிசம்பர் மாதம் வெளியாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த நிலையில், அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டை பார்க்க ரஷ்ய அதிபர் புடின் வருவது குறித்த எந்த திட்டமும் இல்லை என்றும், புடின் ஜல்லிக்கட்டை பார்க்க தமிழகம் வருகிறார் என்ற தகவல் தவறானது என்றும் ஏஎன்ஐ செய்தி நிறுவனம் கூறியுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close