காஷ்மீர்: தொடரும் பயங்கரவாத தாக்குதல்!

  அனிதா   | Last Modified : 30 Oct, 2019 09:39 am
kashmir-terrorist-attack-to-continue

ஜம்மு - காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய அடுத்தடுத்த தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து திரும்பபெறப்பட்டதற்கு பின்னர் காஷ்மீரில் தற்போதையை நிலைமையை மதிப்பிடுவதற்காக ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு நேற்று காஷ்மீர் பள்ளதாக்குக்கு சென்றது. இந்நிலையில், நேற்று மாலை தெற்கு காஷ்மீரின் குல்கம் மாவட்டத்தில் குடியிருப்பு அல்லாத பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் மேற்குவங்கத்தை சேர்ந்த 5 தொழிலாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மற்றொரு தொழிலாளி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் அளித்த தகவலின் படி, உயிரிழந்த 5 பேரும் மேற்குவங்கம் மாநிலம் முர்ஷிதாபாத், பஹல்நகர் கிராமத்தை சேர்ந்த நைமுதீன் ஷேக், முர்ஷாலிம் ஷேக், ரபிகுல் ஷேக், ரபீக் ஷேக் மற்றும் கமருதீன் ஷேக் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் காஷ்மீரில் உள்ள ஒரு ஆப்பிள் பழத்தோட்டத்தில் பணிபுரிந்து வந்துள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. 

முன்னதாக, திங்கள் கிழமை மாலை ஜம்மு - காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்தில் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த டிரக் ஒன்றின் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 டிரக்கர், ஒரு பழ வியாபாரி, ஒரு தொழிலாளி என 6 பேர் உயிரிழந்தனர். 24 மணி நேரத்தில் அடுத்தடுத்து நடத்திய 2 பயங்கரவாத தாக்குதல்களில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். 

Newstm.in 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close