இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் குருதாஸ் காலமானார்!

  அனிதா   | Last Modified : 31 Oct, 2019 09:24 am
senior-communist-party-leader-was-pass-away

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் குருதாஸ் தாஸ்குப்தா கொல்கத்தாவில் இன்று காலமானார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரானவர் குருதாஸ் தாஸ்குப்தா. இவருக்கு வயது 83. கட்சியின் பல்வேறு பொறுப்புகளையும், மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர் என பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். கடந்த சில மாதங்களாக இருதயம் மற்றும் சிறுநீர கோளாறால் அவதிப்பட்டு வந்த இவர், தொடர் மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். கொல்கத்தாவில் வசித்து வந்த இவர் இன்று காலை காலமானார். 

Newstm.in 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close