அரபிக் கடலில் நிலைகொண்டுள்ள ‘மஹா புயல்’ தீவிர புயலாக மாறியுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது. காற்றின் வேகம் 120 கிலோ மீட்டர் வரை இருக்கும் என்பதால் நவம்பர் 4ஆம் தேதி வரை அரபிக் கடலுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளது.
மேலும், லட்சத்தீவுகளின் அதீத கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், கேரளா மற்றும் தமிழக தென்மாவட்டகங்களில் பரவலாக கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.
newstm.in