2 யூனியன் பிரதேசங்கள்: நாட்டின் புதிய வரைபடம் வெளியீடு

  Newstm Desk   | Last Modified : 31 Oct, 2019 06:35 pm
2-union-territories-new-map-of-country-issued

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சட்ட முறைப்படி 2 யூனியன் பிரதேசங்களாக இன்று பிரிந்த நிலையில், நாட்டின் புதிய வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி, சட்டப்பிரவு 370-ஐ மத்திய அரசு திரும்பப் பெற்றுக்கொண்ட பின்னர், ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் பிரதேசங்களை யூனியன் பிரதேசங்களாக அறிவித்து மத்திய அரசு உத்தரவிட்டது. அதையடுத்து ஜம்மு-காஷ்மீர் பகுதி சட்டப்பேரவையுடன் கூடியதாகவும், லடாக் பகுதி சட்டப்பரேவை அல்லாத மத்திய அரசின நேரடி நிர்வாகத்தின் கீழும் செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது

இது தொடர்பான காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம் -2019 நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டம் அக்டோபர் 31ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இன்று முதல், ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஜம்மு-காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரேதங்களாக பிரித்து இணைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில்,  2 யூனியன் பிரதேசங்கள் அதிகாரப்பூர்மாக பிரிக்கப்பட்டதை தொடர்ந்து, அதையொட்டி, , நாட்டின் புதிய வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close