டெல்லியில் சுவாசிக்க தகுதியற்ற நிலையில் காற்று: நாளை முதல் வாகனக்கட்டுப்பாடு அமல்!

  அனிதா   | Last Modified : 03 Nov, 2019 05:49 pm
air-pollution-in-delhi

டெல்லியில் காற்று மாசு அபாய அளவை தாண்டியுள்ளதால் நாளை முதல் வாகனக்கட்டுப்பாடு அமலுக்கு வருகிறது. 

டெல்லியில் காற்று மாசுபாடு என்பது இயல்பான ஒன்றாக மாறிவிட்டது. இருப்பினும், தீபாவளி பண்டிகைக்கு பிறகு டெல்லியில் கடுமையான காற்று மாசு ஏற்பட்டுள்ளது. மிக கடுமையான காற்று மாசு அளவான 500ல் இருந்து தற்போது காற்றின் தரம் 625 என்ற குறியீட்டில் உள்ளதாக மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. அபாய அளவை தாண்டி சுவாசிக்க தகுதியற்ற நிலையில் காற்றின் தரம் உள்ளதால் நாளை முதல் வாகனக்கட்டுப்பாடு அமலுக்கு வருகிறது. இந்த வாகனக் கட்டுப்பாட்டின் படி, ஒற்றைப்படை, இரட்டைப்படை எண்கள் என்ற அடிப்படையில் வாகனங்கள் அனுமதிக்கப்பட உள்ளன. 

தற்போது காற்றில் மாசு அதிகரித்துள்ளதால் இன்று டெல்லி  விமான நிலையத்திற்கு வந்த 32 விமானங்கள் ஜெய்ப்பூர், அமிர்தசரஸ், லக்னோ ஆகிய விமான நிலையங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

Newstm.in 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close