என்.ஆர்.சி எதிர்காலத்திற்கான ஓர் தளம் - ரஞ்சன் கோகாய்!!!

  அபிநயா   | Last Modified : 03 Nov, 2019 09:58 pm
cji-ranjan-gogoi-nrc-a-base-for-future-not-a-document-of-the-moment

அசாம் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள தேசிய குடியுரிமை பதிவேடு, தற்போதைய தருணத்திற்கான ஆவணம் இல்லை என்றும், எதிர்காலத்திற்கான ஒர் தளம் என்றும் குறிப்பிட்டுள்ளார் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்.

அசாம் மாநிலத்தில் வசிக்கும் இந்தியர்களை கண்டறியவும், சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றும் நோக்கத்துடனும், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் படி, கடந்த 2013ஆம் ஆண்டு தேசிய குடியுரிமை பதிவேட்டை பராமரிக்க தொடங்கியது அம்மாநில அரசு. இந்நிலையில், தற்போது வெளியிடப்பட்டுள்ள குடியுரிமை பதிவேட்டின் படி, பதிவு செய்திருந்த 3,30,27,661 பேரில், சுமார் 19 லட்சம் மக்களின் பெயர்கள் பட்டியலில் இடம்பெறவில்லை.

இதை தொடர்ந்து, தேசிய குடியுறிமை பதிவேட்டிற்கு எதிராக பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், "நல்ல நோக்கத்துடன் மேற்கொள்ளப்படும் இந்த பதிவேடு கணக்கெடுப்பு, சில பத்திரிகையாளர்கள் வெளியிடும் தவறான கருத்துக்களால், பலரையும் குழப்பத்தில் ஆழ்த்துகிறது. இது இந்தியர்களையோ, நம்மை நம்பி நம் நாட்டிற்குள் வந்திருப்பவர்களையோ வெளியே அனுப்பும் முயற்சியல்ல என்பதை அனைவரும் நினைவில் வைத்து கொள்ள வேண்டும்" என்று கூறிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், என்.ஆர்.சி தற்போதைய தருணத்திற்கான ஆவணம் இல்லை என்றும், எதிர்காலத்திற்கான ஒர் தளம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close