ஜம்மு-காஷ்மீரில் கையெறி குண்டு தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளனர். மேலும், 13 பேர் காயமடைந்துள்ளனர்.
ஸ்ரீநகரில் மவுலானா ஆசாத் சாலையில் உள்ள சந்தை பகுதியில் பயங்கரவாதிகள் இந்த தாக்குதல் சம்பவத்தை மேற்கொண்டுள்ளனர். இதையடுத்து, பாதுகாப்பு படையினர் இப்பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
மதியம் 1:20 மணியளவில் பரபரப்பான சந்தை பகுதியில் பயங்கரவாதிகளால் கையெறி குண்டு வீசப்பட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். காயமடைந்தவர்களில் இருவர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.
newstm.in