அதிர்ச்சி: லஞ்சம் கேட்ட பெண் வட்டாட்சியரை எரித்து கொன்ற விவசாயி

  Newstm Desk   | Last Modified : 04 Nov, 2019 04:47 pm
woman-burned-to-death

தெலங்கானாவில் லஞ்சம் கேட்டதாக பெண் வட்டாட்சியரை விவசாயி ஒருவர் உயிரோடு எரித்து கொல்லப்பட்ட கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள தாசில்தார் அலுவலகத்தில் பெண் வட்டாட்சியர் விஜயா ரெட்டியை விவசாயி சுரேஷ் என்பவர் பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்றுள்ளார். உடனே, அங்கிருந்தவர்கள் சுரேஷை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரிடம் போலீஸ் மேற்கொண்ட விசாரணையில், நில பத்திரப்பதிவுக்கு வட்டாட்சியர் லஞ்சம் கேட்டு, தன்னை இரண்டு மாதம் அலைக்கழித்ததாகவும், அதனால், ஆத்திரத்தில் கொன்றதாகவும் தெரிவித்துள்ளார்.

பெண் வட்டாட்சியரை விவசாயி ஒருவர் உயிரோடு எரித்து கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close