சோனியா காந்தி - சரத்பவார் சந்திப்பு

  Newstm Desk   | Last Modified : 10 Nov, 2019 09:01 pm
sonia-gandhi-and-sarat-pawar-meet

டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். 

மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல் கடந்த மாதம் நடைபெற்றது. இதில், பாஜக மற்றும் சிவசேனா கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இதில் பாஜக - சிவசேனா கூட்டணி அதிக தொகுதிகளை கைப்பற்றி வெற்றி பெற்றது. இதனிடையே, ஆட்சி அமைப்பதில் பாஜக மற்றும் சிவசேனா இடையே இழுபறி நீடித்து வருகிறது. இதுவரை உடன்பாடு எட்டப்படவில்லை. இந்நிலையில், மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணியை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் மற்றும்  தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் நேற்று டெல்லியில் மகாராஷ்டிரா அரசியல் சூழல் குறித்தும், சிவசேனா கட்சிக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close