டெல்லியின் தற்போதைய நிலைக்கு பாகிஸ்தான், சீனா தான் காரணம் - வினீத் அகர்வால் குற்றச்சாட்டு!!

  அபிநயா   | Last Modified : 06 Nov, 2019 07:54 pm
pakistan-china-reason-for-delhi-s-air-pollution-slams-vineeth-agarwal

டெல்லி பிரதேசத்தில், அதிக மாசு ஏற்படுவதற்கு பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில், விவசாய நிலங்களில் எஞ்சிய பொருட்களை எரிப்பது தான் காரணம் என்று அனைவரும் கூறி வந்ததை தொடர்ந்து, அதற்கு இந்தியாவின் அண்டை நாடுகளில் இருந்து வரும் விஷ வாயு தான் காரணம் என்று கூறியுள்ளார் பாஜக தலைவரான வினீத் அகர்வால்.

ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில், நம் நாட்டின் மீதிருந்த அதிருப்தியால், இந்தியாவை சர்வதேச நாடுகளுக்கு முன்னர் ஓர் குற்றவாளியாக தோற்றுவிக்க பல வழிகளில் முயன்று வந்தது பாகிஸ்தான். ஆனால், அதன் முயற்சிகள் அனைத்தும் வீண் என்ற நிலை உருவாகியதால் ஏமாற்றமடைந்த பாகிஸ்தான், இப்படியே விட்டு விட்டால் எங்கே இந்தியா மிகபெரிய அளவில் வளர்ச்சியடைந்து விடுமோ என்ற பயத்தினால் தற்போது விஷ வாயுகளை நம் நாட்டின் மீது ஏவி விடுவதாக குற்றச்சாட்டை முன் வைத்து ஒர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் மீரட்டை சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி தலைவரான வினீத் அகர்வால்.

மேலும், பாகிஸ்தான் ஆதரவாளரான சீனாவும் இந்த விஷ வாயு ஏவுதலுக்கு துணை நிற்பதாக கூறி, இந்தியாவின் அண்டை நாடுகளான சீனா பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகள் மீதும் குற்றம் சுமச்சியுள்ளார் வினீத் அகர்வால்.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close