அயோத்தி தீர்ப்பு : உ.பி.யில் தற்காலிக சிறைகள் அமைப்பு

  அனிதா   | Last Modified : 07 Nov, 2019 10:39 am
eight-temporary-jails-set-up-in-different-colleges-in-ambedkar-nagar-district

அயோத்தி வழக்கில் விரைவில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளதை முன்னிட்டு உத்தரப்பிரதேசத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள கல்லூரிகளில் 8 தற்காலிக சிறைகள் அமைக்கப்பட்டுள்ளன. 

உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் அயோத்தி வழக்கில் பல ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. இவ்வழக்கில் பலகட்ட விசாரணைகள் மற்றும் வாதங்கள் நிறைவடைந்த நிலையில், தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நவ.14ஆம் தேதிக்குள் அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக அயோத்தியில் 144 தடை பிறப்பிக்கப்பட்டு, போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் உத்திரப்பிரதேச மாநிலத்தில் பதற்றம் நிறைந்த மாவட்டமாக கருதப்படும் அம்பேத்கார் நகர் மாவட்டத்தில் உள்ள வெவ்வேறு கல்லூரி வளாகங்களில் 8 தற்காலிக சிறைச்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. அயோத்தி தீர்ப்பு வழங்க இருப்பதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இத்தகைய சிறைச்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close