அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாகவுள்ள நிலையில் மாநில அரசுகள் சட்டம்-ஒழுங்கு கண்காணிக்க வேண்டும் என்று அனைத்து மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
உத்தரபிரதேசத்தில் 4,000க்கும் அதிகமான மத்திய பாதுகாப்பு படையினரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த அறிவுறுத்தியுள்ளது. அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்றும், உளவுத்துறை அளிக்கும் தகவல்களின் அடிப்படையில் உடனடியாக நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
newstm.in