புல் புல் புயல் நாளை மறுநாள் தீவிர புயலாக கரையை கடக்கும்: இந்திய வானிலை மையம்

  அனிதா   | Last Modified : 08 Nov, 2019 03:43 pm
the-bull-bull-storm-will-cross-on-november-10

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள புல் புல் புயல் அதி தீவிர சூறாவளி புயலாக நாளை மறுநாள் கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள புயல் சூறாவளி புயலாக தீவிரமடைந்து வடக்கு நோக்கி நகரக்கூடும் என்றும், இதன் காரணமாக ஒடிசாவுக்கு அருகே உள்ள பல இடங்களில் இன்றும், நாளையும் கன மழை பெய்யும் என்றும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், நவ. 10 ஆம் தேதி தீவிர சூறாவளி புயலாக  மேற்கு வங்கத்தின் சுந்தர்பன் மற்றும் வங்க தேசத்தின் சாகர் தீவுகள் இடையே கரையை கடக்கும் என்றும், 110கி.மீ முதல் 135 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது. 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close