டெல்லி: 7 வயது சிறுமியை பலாத்காரம் செய்தவன் போக்ஸோ சட்டத்தில் கைது!!

  அபிநயா   | Last Modified : 10 Nov, 2019 07:07 pm
tea-stall-owner-rapes-7-year-old-girl-in-delhi-on-pretext-of-offering-her-food

டெல்லியில், 7 வயது சிறுமியை பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கியுள்ள டீ கடை முதலாளி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவின் தலைநகரில் பெண் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகள் நடைபெறுவது தொடர்ச்சியாகிவிட்டது. இந்த வரிசையில் டெல்லியின் ஆதர்ஷ் நகரில் வசிக்கும் 7 வயது பெண் குழந்தையை பாலியல் தொல்லைக்கு உட்படுத்தியுள்ளார் அதே பகுதியை சேர்ந்த ஓர் டீ கடை முதலாளி.

வகுப்பு முடிந்து வீடு திரும்பிகொண்டிருந்த பெண் சிறுமியை உணவு அளிப்பதாக கூறி, தனது டீ கடைக்கு பின்னர் உள்ள ஓர் தனி அறையில் வைத்து இதை செய்திருக்கும் அந்த முதலாளி, இந்த சம்பவம் குறித்து யாரிடமும் கூற கூடாது என்றும் மிரட்டியுள்ளதாக கூறப்படுகின்றது. ஆனால் நடந்த சம்பவத்தை தன் தாயிடம் கூறிய அந்த சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றதை தொடர்ந்து, அவர் பாலியல் தொல்லைக்கு உட்படுத்தப்பட்டிருப்பது நிரூபனமாகியுள்ளது. 

இதை தொடர்ந்து அந்த சிறுமியின் தாயார் அளித்துள்ள புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்டிருந்த ஆதர்ஷ் நகர் போலிசார் அந்த கடை முதலாளியை பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டமான போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து வழக்குபதிவு செய்துள்ளனர்.

Newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close