அயோத்தியா வழக்கு தீர்ப்பு : புதிய இந்தியாவில் வெறுப்புகளுக்கு இடமில்லை - பிரதமர் மோடி!!

  அபிநயா   | Last Modified : 10 Nov, 2019 07:16 pm
no-place-for-fear-bitterness-and-negativity-in-new-india-pm-modi-in-address-to-the-nation-on-ayodhya-verdict

இந்திய வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய அயோத்தியா வழக்கின் தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தால் நேற்று வழங்கப்பட்டுள்ள நிலையில், புதிய இந்தியாவில் இனி பயம், வெறுப்பு, எதிர்மறை எண்ணங்கள் போன்றவற்றிற்கு சிறிதளவும் இடமில்லை என்று கூறியுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

அயோத்தியா வழக்கில், அயோத்தியா நிலம் அரசாங்கத்திற்கே சொந்தம் என்று கூறியுள்ள ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு அங்கு ராமர் கோவில் கட்டுவதற்காக அறக்கட்டளை அமைக்கவும் அதுகுறித்த அறிக்கைகள் சமர்ப்பிக்கவும் 3 மாத கால அவகாசம் அளிப்பதாக அறிவித்ததை தொடர்ந்து,  இஸ்லாமியர்களுக்கென்று தனியாக 5 ஏக்கர் நிலம் வழங்கபட வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை தொடர்ந்து மக்களுடன் உரையாற்றிய பிரதமர் மோடி, வரலாற்று சிறப்புமிக்க இந்த வழக்கின் தீர்ப்பை, புதிய இந்தியா பிறப்பதற்கான ஓர் அடித்தளமாக எண்ணுமாறும், அத்தகைய இந்தியாவின் வளர்ச்சிக்காக அனைத்து இந்தியர்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைத்துள்ளார்.

இந்தியா பாகிஸ்தானிற்கு இடையேயான கர்தார்பூர் வழித்தடமும் இன்று திறக்கப்பட்டுள்ள நிலையில், அயோத்தியா வழக்கும் முடிவடைந்துள்ளால் இந்த நவம்பர் 9 ஆம் தேதி இந்தியாவின் வரலாற்றில் ஓர் முக்கிய இடம் பிடித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதை தொடர்ந்து, இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமை என்ற தனித்துவத்தை சர்வதேச நாடுகளில் எவரேனும் அறிய விரும்பினால், அயோத்தியா தீர்ப்பிற்கு இந்திய மக்களின் ஒருமித்த மகிழ்ச்சியே சான்று என்றும் கூறியுள்ளார்.

மேலும், புதிதாக பிறந்துள்ள இந்தியாவில் எந்த ஒரு வெறுப்புகளுக்கும், பயத்திற்கும், எதிர்மறை எண்ணங்களுக்கும் இடமில்லை என்று கூறியுள்ள பிரதமர் மோடி, இந்த வழக்கில் யாராயும் புண்படுத்தாத வகையில் மிக சரியான தீர்ப்பு வழங்கியுள்ள உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கும் தனது மனமார்ந்த நன்றியும் தெரிவித்துள்ளார். 

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close